தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனதால் அதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்தார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி பிச்சைக்காரன் 2 படம் தமிழில் 3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். அதன் பிறகு உலக அளவில் 6 கோடி ரூபாய் வரையிலும், தெலுங்கில் 3 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்துல்லதாக கூறப்படுகிறது. மேலும் மொத்தமாக பிச்சைக்காரன் 2 படம் 10 கோடிக்கும் மேல் முதல் நாளில் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.