தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரைசா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பொழுது விடியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரைசா தான் அழுதபடி இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அதோடு நீங்கள் யாரும் தனியாக இல்லை. அதிலிருந்து நாம் எல்லோரும் படிப்படியாக மீண்டு வருகிறோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரைசா வில்சன் எதற்காக இப்படி ஒரு பதிவை வெளியிட்டு அழுத புகைப்படங்களை வெளியிட்டார் என்ற விவரம் தெரிய வரவில்லை. மேலும் ரைசாவின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Raiza (@raizawilson)