தமிழ் திரையுலகில் வளர்ந்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவர் தான் திவ்யபாரதி. இவர் சதீஷ் செல்வகுமார் டைரக்டில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021-ம் வருடம் வெளியாகிய பேச்சுலர் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமானார். மேலும் மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் திவ்யபாரதி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.

அண்மை காலமாக திவ்யபாரதி இடுப்பை அறுவை சிகிச்சை செய்தார் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலளித்த இவர், நான் பள்ளி பருவத்தில் மிகவும் உல்லியாகதான் இருப்பேன். அப்போது சிலர் என்னை உருவகேலி செய்வர். நான் எனது இடுப்பை அறுவை சிகிச்சை செய்ததாக சிலர் குறிப்பிட்டு இருந்தார்கள். நான் அதுபோன்று செய்யவில்லை என திவ்யபாரதி கூறியுள்ளார்.