தற்போது வெங்கட்பிரபு டைரக்டில் விஜய் நடிக்க இருப்பது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு தன் படங்களில் எப்போதுமே தனது தம்பிகள் பிரேம்ஜி மற்றும் யுவன் இருவரையும் கமிட் செய்வார். எனினும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்க போவதில்லை என்பது போல் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இருப்பினும் நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றும் தளபதி-68 திரைப்படத்தில் அவர் நடிப்பது சந்தேகம்தான் எனவும் சொல்லப்படுகிறது.