
பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14 இருக்க வாய்ப்புள்ளது. ஏப். 14 மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர் கூறிய தினம் நெருங்கிவிட்டதால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பல கட்சிகளும் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை நாளை காலை 10 மணிக்கு DMKFiles என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிடுவேன் என அறிவித்துள்ளார். இதனால், பாஜகவை சேர்ந்தவர்கள் ட்விட்டர் பக்கத்தில் DMKFiles என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர். இதனால், தற்போது #DMKFiles என்ற ஹேஷ் டெக் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆதாரப்பூர்வமாக பட்டியலை வெளியிட்டால், இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
DMK Files
April 14th, 2023 – 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 13, 2023