பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள் என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார்.

திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர், “நம்மை எல்லாம் மனிதர்களாக தலைநிமிர வைத்தவர் தான் அம்பேத்கர், பெரியார் மற்றும் மார்க்ஸ். நாம் எப்போதும் கொள்கைகளுக்கு முதன்மையாக கொண்டுள்ள இயக்கம். தேர்தல் என்பது நமக்கு இடையில் வரப்போற ஒரு நிகழ்வு மட்டும் தான்.

எம்எல்ஏ எம்பி போன்ற பதவிகள் நம் பயணத்தில் ஒரு இளைப்பாறுதல் தான். இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக்கூடியவர் யார் என்பதும்? அவர்கள் மூலம் அம்பலமாகி இருக்கிறது பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அவரை வீழ்த்த வேண்டும் என்று யார் முயற்சித்தார்கள் என்பதை  நாமும் அறிவோம்.