தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவி இடம் திமுக கட்சியின் எம்.பி கிரிராஜன் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை பெரம்பலூரில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெற்றவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன் பிறகு சென்னை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பயணிகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.

எனவே ஷிப்ட் முறையில் போதுமான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை‌ நியமிக்க வேண்டும். அதன் பிறகு ஒருங்கிணைந்த நவீன மருத்துவமனையை கட்டி முடித்து அதில் புற்று நோய்க்காக தனி பிரிவையும் உருவாக்க வேண்டும். அதன் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் புதிய மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் இதுவரை பணிகள் கட்டிப்முடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கிறது. இங்கு பணிகள் முழுமையாக முடிவடையாததால் தற்போது இயங்கி வரும் மருத்துவமனையின் பணிகளும் பாதிப்படைந்துள்ளது.

அங்கு அடிப்படை சிகிச்சை அளிக்கக்கூட போதிய மருத்துவர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய துறையாக இருக்கும் ரயில்வே துறையின் மருத்துவமனையை நம்பி 75% ஊழியர்கள் இருப்பதால் போர்க்கால அடிப்படையில் நவீன மருத்துவமனையை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருப்பது போன்ற வசதிகளையும் அனைத்து மருத்துவமனையிலும் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.