விலங்குகளிடம் அன்பு காட்ட வேண்டும் என்று ஒருபுறம் விழிப்புணர்வுகள் நடந்தாலும், மறுபுறம் மனிதநேயமற்ற சில செயல்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில், ஒரு பெண் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறிய நாய் குட்டிகளை இரக்கமே இல்லாமல் தூக்கி சுவற்றில் அடித்துக் கொன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ऐसी महिलाएं किसी की माँ क्या बनेंगीं भला… ये इंसान के रूप में श्राप बनकर जन्मी हैं।
उन कुत्ते के बच्चों का क्या दोष था जो उन्हें इस तरह से मार दिया इस राक्षसी ने 💔😥 pic.twitter.com/jNgVdX0KDI
— Ashwini Yadav (@iamAshwiniyadav) March 6, 2026
அந்த நாய் குட்டிகளின் தாய் அருகிலேயே நின்று கொண்டிருக்க, எவ்வித தயக்கமும் இன்றி அந்தப் பெண் செய்த இந்த கொடூரச் செயல் பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது.
நாய் குட்டிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்தப் பெண்ணின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கொந்தளித்து வருகின்றனர்.
