
ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் மரக்கன்றுகள் நடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி எனும் கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் பழக்கமுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 10 லட்சம் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
மேலும், பெற்றோரிடம் ரூ.10 ஆயிரம், உள்ளூர் மக்களிடம் ரூ. .31 ஆயிரம் பெற்று, அந்த பெண் குழந்தையின் பெயரில் FD செய்கின்றனர். பெண் குழந்தைகளை காக்கும் பிப்லாந்திரி கிராமத்தின் பணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது