அக்டோபர் 24ஆம் தேதி முதல் சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என  மெட்டா அறிவித்துள்ளது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவித்துள்ளது. புதிய அம்சங்களை மேம்படுத்தவும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவையை மேம்படுத்தவும் பழைய ஸ்மார்ட்போன்களில் சேவையை நிறுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. பழைய பதிப்புகள் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

முந்தைய வருடங்களிலும் சில போன்களில் இருந்து வாட்ஸ்அப் நீக்கப்பட்டது. அதன்படி, ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குக் கீழே இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது. iPhone 5 மற்றும் 5c மற்றும் அதற்குக் கீழே உள்ளவற்றிலும் முடக்கப்படும்.