நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோரஞ்சால் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ராசினி(3), ரசினி(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் ரவியின் பாட்டி ம் பராமரிப்பில் வளர்கின்றனர். இந்நிலையில் ரவி தனது மனைவியிடம் வேலையை விட்டு விட்டு குழந்தைகளை கவனிக்க சொந்த ஊருக்கு வா, நாம் கூலி வேலை செய்து குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். அதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த ரவி தனது குழந்தைகளை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி அதனை செல்போனில் வீடியோ எடுத்து ஜெயலட்சுமிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி தனது உறவினர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பெண் குழந்தைகளையும் மீட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின்படி இரண்டு பெண் குழந்தைகளும் ஊட்டி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் பாமாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரவியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.