இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் தற்போது ஏழை மக்களுக்கு உதவும் மதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி காண்யா ஆசீர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒரு கோடியை 80 லட்சம் ரூபாய் தரவுள்ளதாக யூடியூப் சேனல் ஒன்று தகவல் கூற அதை சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பற்றி மத்திய அரசின் PIB பேக்ட் செக் அளித்த விளக்கத்தில், அதுபோன்று எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை என்று கூறியுள்ளது. இது போன்ற செய்திகளை நம்ம மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.