
தமிழகத்தில் தற்போது அதிக அளவில் கார் மற்றும் ஆட்டோ போன்ற அனைத்து வாகனங்களையும் பெண்கள் இயக்கி வருகிறார்கள். இது போன்ற பெண் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பாக பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முதல்வர் ஸ்டாலின் பெண் ஓட்டுநர்களுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பாக சுமார் 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அதிக அளவிலான பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கான மானியம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.