ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி மாதுரி. இந்த தம்பதிக்கு புஷ்பா குமாரி(7) ஜெஸ்ஸி நோவா(5) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். பிரசாத் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்ற பிரசாத் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது மனைவியும் இரண்டு மகள்களும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாதுரியின் மார்பகங்களிலும், தொடை பகுதிகளிலும் பிளேடால் அறுக்கப்பட்ட காயங்கள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மர்ம நபர்கள் மாதுரி, மகள்களை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
