கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டையை சேர்ந்த புஷ்பநாதன் (34), விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், வரும் 5-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இதற்காக அப்பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் கிராம மக்களுக்கு திருமண அழைப்பிதழ்களையும் வழங்கியிருந்தனர்.
ஆனால் புஷ்பநாதன், தனது தந்தை லட்சுமணன் மற்றும் தாய் விஜயலட்சுமி ஆகியோரின் துணையுடன் வேறொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்களை நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணுக்கு அனுப்பியதோடு, தட்டிக்கேட்ட அவரை குடும்பத்துடன் சேர்ந்து திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் புஷ்பநாதன் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
