ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள மத்திய மண் உவர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள விஞ்ஞானி ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பள்ளிக்கூட வேன் டிரைவரான கிருஷ்ணகாந்த் என்பவர், விஞ்ஞானியின் வயதான தாயைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார்.
அந்தப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது, அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பெண்ணின் வாயைக் கைகுட்டையால் பொத்தி தரையில் தள்ளித் தாக்கத் தொடங்கினார்.
அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொள்ளையனைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த கொடூரமான தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Scientist’s Elderly Mother Allegedly Attacked by School Van Driver During Robbery Attempt in Karnal
📍Karnal, Haryana: A school van driver identified as Krishankant was allegedly caught after breaking into the house of an elderly woman, mother of a scientist, and attempting to… pic.twitter.com/iIDDlvFDSw— Deadly Kalesh (@Deadlykalesh) May 9, 2026
“>
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த வேன் டிரைவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்பு வளாகத்திலேயே நடந்த இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
