திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு நடந்திருக்கும் இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்திருக்கிறது. ஒரு பெண் காணாமல் போன நிலையில், அவரை அவரது கணவரும் அவரது குடும்பத்தினரும்தான் சேர்ந்து கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
“என் பொண்ணை கொன்னுட்டாங்க” எனப் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், எந்த ஆதாரமும் சரியாக இல்லாத நிலையிலும் அந்த ஏழைத் தொழிலாளி குடும்பம் மொத்தமும் சிறையில் வாடி வருகிறது. ஆனால், இப்போது வெளிவந்துள்ள உண்மை போலீசாரையே நிலைகுலையச் செய்திருக்கிறது.
கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட அந்தப் பெண், தனது கள்ளக்காதலன் வீட்டில் எவ்விதக் கவலையும் இன்றி ஜாலியாகத் தங்கியிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். தனது கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காகச் சொந்தக் குடும்பத்தையே கொலை வழக்கில் சிக்க வைத்து, அவர்களைச் சிறைக்கு அனுப்பிய அந்தப் பெண்ணின் கொடுரமான செயல் பலரையும் கொதிப்படையச் செய்துள்ளது.
Unfortunately, Our laws aren’t strict enough to punish her.😡😡 pic.twitter.com/Vg1rpsLqt9
— Tathvam-asi (@tathvamasi6) March 26, 2026
“பாவம் அந்தப் புருஷனும் அவன் குடும்பமும், ஒரு தப்பும் செய்யாம ஜெயில்ல இருக்காங்களே” என இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
