தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக)-ம் தங்கள் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, தேர்தல் வியூகங்களை அமைப்பது போன்ற பல வேலைகளைத் தவெக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18-ஆம் தேதி தவெக சார்பில் ஒரு பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கிறார்.

​விஜய் பங்கேற்கும் இந்தப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைத் தவெக நிர்வாகிகள் மிகத் தீவிரமாகச் செய்து வருகின்றனர். கூட்டத்தில் ஒரு சிறப்பு ஏற்பாடாக, தனியாக வரும் பெண்களுக்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் மேடைக்கு மிக அருகில் முன்பகுதியில் இதற்காக நான்கு தனி இடங்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.