பொதுப் போக்குவரத்தான பேருந்துகளில் இருக்கைக்காக (சீட்) பயணிகளிடையே சண்டை வருவது அன்றாட நிகழ்வுதான். ஆனால், சில சமயங்களில் இந்த சண்டைகள் கைக்கலப்பு மற்றும் சச்சரவாக மாறிவிடுகின்றன. தற்போது, பேருந்து ஒன்றில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடந்த கடுமையான சண்டையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பெண் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருப்பதும், அவருக்கு எதிரே அந்த ஆண் சப்போர்ட் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதும் தெளிவாகத் தெரிகிறது.

அவர் விலகி நிற்கச் சொன்னபோது, அந்த ஆணுக்கு அவர் பேசிய தொனி பிடிக்கவில்லை. இதனால், அவர் “பெண்கள் பேருந்தில் மற்ற பெண்களின் ஆதரவைப் பயன்படுத்தி ஆண்களைப் பயமுறுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார். இதன் பிறகு, இருவருக்கும் இடையேயான சண்டை மிக மோசமாகி, ஒருவரையொருவர் தரக்குறைவாகத் திட்டித் தீர்க்கும் நிலைக்கும், பிள்ளைகளை வளர்க்கும் முறை (Parenting) பற்றிய பேச்சுக்கும் சென்றது. இந்தச் சண்டையின் காரணமாகப் பேருந்தில் மிகுந்த பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.