நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் “மனைவி விற்பனை” என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோதக் குற்றங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. சீனாவில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அங்கிருக்கும் இளைஞர்கள் நேபாளப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்கின்றனர். ஆனால், அங்கே சென்ற பிறகு அந்தப் பெண்கள் பாலியல் தொழிலிலும், மனிதக் கடத்தல் கும்பலிடமும் சிக்க வைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏழைப் பெண்களின் வாழ்வோடு விளையாடும் இந்தக் கொடூரம் மனித உரிமைகளையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

​இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, சீன தூதரகம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சட்டவிரோதமான ஆன்லைன் வரன் பார்க்கும் சேவைகளை (Matrimonial sites) நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருமண ஆசை காட்டி பெண்களைக் கடத்தும் கும்பல்கள் அதிகரித்து வருவதால், எல்லையோரப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. அழகான வாழ்க்கையைத் தேடிச் செல்லும் பெண்கள், இப்படி ஒரு நரகத்தில் தள்ளப்படுவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.