பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக உஜ்வாலா யோஜனா தற்போது அமலில் உள்ள 2.0 திட்டத்திற்கு 18 வயது நிரம்பிய இதுவரை இலவச சிலிண்டர் பெறாத பெண்கள் தங்களின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆவணங்களை கொண்டு www.pmuy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு விண்ணப்பங்கள் பரிசளிக்கப்பட்ட தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
