மெட்டா நிறுவனம் whatsapp பயனர்களுக்கு அதிர்ச்சி செய்து ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 71.1 லட்சம் whatsapp கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 71,11,000 கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

இதில், 25,71,100 கணக்குகள் பயனர்களிடமிருந்து புகார்களை பெறுவதற்கு முன்பே தடை செய்யப்பட்டவை என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் போலியான தகவல்களை பரப்புதல், மோசடி, பாதுகாப்பு தொடர்பான குறைகள் மற்றும் துஷ் பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.