சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 155370 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஏதேனும் உடனடி தேவை ஏற்பட்டால் 155370-ஐ அழைக்கலாம் என்றும் புகார் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் அணியை மெட்ரோ நிர்வாகம் பணியமர்த்தியது குறிப்பிடத்தக்கது.