சமீபகாலமாக வரதட்சணை சம்பந்தமான கொடுமைகளும், அதனால் ஏற்படும் இளம்பெண்களின் மரணமும் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, டெல்லியின் துவாரகா பகுதியில் இருபத்து இரண்டு வயதான கோமல் வர்ஷா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அமன் என்பவரை கோமல் வர்ஷா திருமணம் செய்துகொண்டார். இருவரும் டெல்லியின் படு சராய் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தற்போது வர்ஷா இரு மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி அவரது உடல் வீட்டில் சுயநினைவு இன்றி கிடந்தது.

விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு விரைந்த வர்ஷாவின் தந்தைக்கு மருத்துவமனையில் வர்ஷா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியாமல் இருந்த போதும், அவரது உடலில் அடித்த ny அடையாளங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கோமல் வர்ஷாவின் பெற்றோர் அளித்த புகாரில், வரதட்சணைக்காக தினமும் தங்கள் மகளை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அதுவே இறுதியில் உயிரிழப்புக்கான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருடைய கணவர் அமன், அவரது பெற்றோர் உள்ளிட்டவர்கள் தான் இந்த மரணத்திற்கு நேரடியாக பொறுப்பாளிகள் எனவும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோமல் வர்ஷாவின் மரண விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.