இந்தியாவில் ஐபிஎல் 2026 திருவிழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தானில் நடக்கும் பிஎஸ்எல் (PSL) தொடர் அடுத்தடுத்த சொதப்பல்களால் உலக அரங்கில் அசிங்கப்பட்டு வருகிறது. முல்தான் சுல்தான் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர், பிஎஸ்எல் தொடரின் மோசமான கால அட்டவணையை வெளிப்படையாகவே கலாய்த்துள்ளார்.
தனது அணிக்கு அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் வைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், “ஒரு பெட்ஷீட்டும் தலையணையும் கொடுத்தால் மைதானத்திலேயே படுத்து தூங்கிவிடுவேன், அவ்வளவு சீக்கிரம் அடுத்த மேட்ச் வந்துவிட்டது” எனத் தெரிவித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இடைவேளையே இல்லாமல் முல்தான் அணி விளையாட வேண்டியிருந்தது வீரர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 8 அணிகளை வைத்துக் கொண்டே சரியான ஷெட்யூல் போடத் தெரியாத பாகிஸ்தான் வாரியத்தை, ஐபிஎல் தொடருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். தொடர்ச்சியான போட்டிகளால் வீரர்கள் அதிருப்தியில் இருந்தாலும், முல்தான் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
