வெனிசுலா நாட்டில் நேற்று முன்தினம் மாலை, சில நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தின் வீரியத்தால் மாபெரும் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல அடுத்தடுத்து சரிந்து விழும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மக்கள் தங்கள் உயிரைத் தற்காத்துக் கொள்ள கடைசி நொடியில் அலறியடித்துக் கொண்டு கட்டிடங்களில் இருந்து வெளியேறும் பதற்றமான வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இந்த இயற்கை பேரிடரால் இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பெரும் சோகத்திற்கு இடையே, மாலை 6:04 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்படுவதற்குச் சற்று முன்பாகவே தங்களது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு கூகுள் நிறுவனத்திடமிருந்து நிலநடுக்க எச்சரிக்கை அறிவிப்பு வந்ததாக உயிர்தப்பிய பல மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர். அதாவது ஸ்மார்ட்போன்களில் உள்ள ‘அக்ஸிலரோமீட்டர்’ (Accelerometer) சென்சார் இந்த ஆரம்பகட்ட அதிர்வுகளைக் கண்டறிந்து கூகுள் சர்வருக்கு சிக்னலை அனுப்புகிறது.

மேலும் ஒரே பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான போன்களில் இருந்து இதுபோன்ற சிக்னல்கள் ஒரே நேரத்தில் வருவதை வைத்து நிலநடுக்கத்தை உறுதி செய்யும் கூகுள் சர்வர்கள், உடனடியாக அந்த பகுதி மக்களுக்கு முன்கூட்டியே அலர்ட் அனுப்பி பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது இந்த விபரீதத்திலும் பெரும்