விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசாவை முந்திச் சாதனை படைக்கும் நோக்கில், செவ்வாய் கிரகத்திலிருந்து மண்ணைக் கொண்டு வரும் திட்டத்தைச் சீனா தீவிரப்படுத்தியுள்ளது. 2031-ம் ஆண்டுக்குள் செவ்வாயிலிருந்து சுமார் 500 கிராம் மண்ணை பூமிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே சீனாவின் தற்போதைய பிரதான இலக்காக உள்ளது.

​இதற்காக சீனாவின் ‘Tianwen-3’ விண்கலம் 2028-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை நோக்கி ஏவப்பட உள்ளது. அங்கு மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு 2031-க்குள் பூமிக்குத் திரும்பும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், செவ்வாய் கிரகத்திலிருந்து மண்ணைக் கொண்டு வந்த முதல் நாடு என்ற பெருமையைச் சீனா பெற்று விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும்.