உத்தரகாண்ட் இமயமலை அடி வாரத்தில் அமைந்து இருக்கும் சிறு நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த சிறப்புவாய்ந்த நகரத்திற்கு பெரும் சோதனை வந்துள்ளது. இந்நகரம் நில வெடிப்புகளாலும், நிலச் சரிவுகளாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜோஷிமத் நகரம், நிலச்சரிவு மற்றும் நில வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு படிப்படியாக பூமிக்குள் புதைந்து வருகிறது. இங்கு உள்ள 4,500 கட்டிடங்களில் 610 கட்டிடங்கள் விரிசல்கள் ஏற்பட்டு, அவை வாழத் தகுதியற்றவையாக மாறி இருக்கிறது.

அந்த கட்டிடங்களில் வாழ்பவர்களை உடனே வெளியேற்றுமாறு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது அதற்குரிய பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 2020 முதல் மார்ச் 2022 வரை சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் முழுப்பகுதியும் மெதுவாக மூழ்குவதை காட்டுகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரின் பல்வேறு பகுதிகள் புதைந்து வரும் சூழ்நிலையில், அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தின் அலிகாரில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ளது. பல்வேறு வீடுகளில் திடீரென்று விரிசல் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.