உலகத்தில் ஒவ்வொரு தலைமுறையும் தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மில்லியனியல்கள், பூமர்கள் மற்றும் ஜென் Z தலைமுறைகளில் அதிகம் படித்தவர்கள் யார் என்பது குறித்து பார்ப்போம். அதில், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள், “மில்லியனியல்கள்” (Millennials) என அழைக்கப்படுகின்றனர். தற்போதைய ஆய்வுகளின் அடிப்படையில், இத்தலைமுறை அதிக கல்வியுடன் முன்னேறிய தலைமுறையாக கருதப்படுகிறது.

அதேவேளை, வாழ்க்கைத் தரத்தில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து, குறைவான சம்பளத்திலும், பொருளாதார நிலைத்தன்மை இல்லாத சூழலிலும் அவர்கள் போராடுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட பல சர்வதேச ஆய்வுகள் மற்றும் பணியாளர் தரவுகளின் அடிப்படையில், மில்லியனியல்களுக்கு மேலதிக கல்வித் தகுதிகள் இருந்தாலும், பலர் கல்விக்கு செலுத்திய கடன்களை அடைப்பதிலேயே சிக்கி இருக்கிறார்கள். இதனால் வீடு வாங்குதல், குடும்பம் தொடங்குதல், முதலீடு செய்வது போன்ற வாழ்வியல் வளர்ச்சிகள் தாமதமாகின்றன.

முந்தைய தலைமுறையான “பூமர்கள்” (1946-1964) மற்றும் “ஜென் X” (1965-1980) தலைமுறையுடன் ஒப்பிடும்போது, மில்லியனியல்கள் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் சமூக பொறுப்புகளில் அதிக ஈடுபாடுடன் இருப்பது தெரியவந்தாலும், அவர்களது பொருளாதார சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் Boomers (பூமர்கள்): 1946 – 1964

Gen X: 1965 – 1980

Millennials (மில்லியனியல்கள்): 1981 – 1996

Gen Z: 1997 – 2012 என கணக்கிடப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.