கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை சிவபெருமான் வடிவில் சித்தரித்து கன்னட நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரை மற்றும் புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், டி.கே.சிவக்குமார் நீண்ட சடைமுடி, புலித்தோல் ஆடை, கையில் உடுக்கை மற்றும் சூலத்துடன் சிவபெருமானின் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தத் தோற்றம், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி பல தரப்பிலிருந்தும்க ண்டனக் குரல்கள்எழுந்துள்ளன.இதுகுறித்து வழக்கறிஞர் கிரீஷ் பரத்வாஜ் கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், “அரசியல் லாபங்களுக்காகவும், விளம்பரத்திற்காகவும் நம்முடைய கடவுள்களின் புனிதத்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது அப்பட்டமான தெய்வ நிந்தனை ஆகும்.

சனாதன தர்மத்தை இப்படி அற்பமாக்குவதை கன்னட மக்கள் எப்படி சாதாரணமாகக் கடந்து போகிறார்கள் என்று தெரியவில்லை” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அரசியல் தலைவர்களைக் கடவுளோடு ஒப்பிட்டு சித்தரிக்கும் இதுபோன்ற செயல்களுக்கு சமூக வலைதளப் பக்கங்களில் தற்பொழுது நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்