மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், துபாயில் நேற்று சனிக்கிழமை பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இதனால் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவிலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வானில் ஏவுகணைகள் நெருப்புப் பந்துகளாகப் பறந்ததாகவும், ஜன்னல்கள் அதிரும் அளவுக்குப் பயங்கர சத்தம் கேட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.

​அதேசமயம், புர்ஜ் கலிஃபாவின் உரிமையாளர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன. பலரும் நினைப்பது போல இது துபாய் சுல்தானுக்குச் சொந்தமானது கிடையாது; ‘எமார் பிராபர்ட்டீஸ்’ நிறுவனர் முகமது அலப்பர் என்பவரே இதன் உண்மையான உரிமையாளர். 163 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் ஒரு மாத வாடகை மட்டுமே பல லட்சங்களைத் தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.