ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும், தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயண விவரங்களை அறிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
