தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.