நான்கு மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரசும், மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் –  சத்தீஸ்கரில் பாஜகவும் வெற்றி பெற இருக்கின்றன. இந்த வெற்றியை மாநில தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பட்டியலின மக்கள், மலைவாழ் பகுதி மக்கள்,  பட்டியலின சமூகத்தை ஜனாதிபதி ஆக்கியதற்கு மக்கள் BJP-க்கு நன்றி கடன் செலுத்தி உள்ளார்கள்.

பாரதிய ஜனதா கட்சியால் மட்டும்தான் மலைவாழ் மக்களுக்கு, பட்டியலின மக்களுக்கு, ஓபிசி மக்களுக்கு உந்து சக்தியாக இருக்க முடியும். பாஜக தான் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தப்படும் முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் வைத்திருப்பதன் விளைவாக இன்றைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 3 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு அபரிதமான வெற்றியை பெற்று இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராவது என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் இன்னும் 450 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெறுவதற்கு   வழிவகை கொடுக்கக்கூடிய தேர்தலாக இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் உடைய ”INDI” கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் கொடுத்துள்ளதுக்கள்.

ராஜஸ்தான் ஆகட்டும், சத்தீஸ்கர் ஆகட்டும், மத்திய பிரதேச ஆகட்டும், INDI அலைன்ஸ் தேவையில்லாத அலைன்ஸ்… ”INDI”அலைன்ஸ் மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத அலைன்ஸ் என பெரும்பான்மையான மக்கள் ஒதுக்கி வைத்துளர்கள் என தெரிவித்தார்.