நான்கு மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரசும், மத்திய பிரதேசம் – ராஜஸ்தான் –  சத்தீஸ்கரில் பாஜகவும் வெற்றி பெற இருக்கின்றன. இந்த வெற்றியை மாநில தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,  4 மாநில தேர்தல் என்பது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு கிடைத்த வெற்றி. அவர்களுடைய வளர்ச்சி அரசியலுக்கான வெற்றி.  மக்கள் எந்த அளவுக்கு ஒரு பாசத்தை வைத்து இருக்கிறார்கள் என்பதை இது காட்டுது.

அதனாலதான் மத்திய பிரதேசத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் இந்த முறை பெற்றிருக்கிறோம். மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுடைய வளர்ச்சி, அதே போல் அங்க இருக்க கூடிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது.

இந்தியா அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒருவர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சி அமைப்பது என்பது மிகப்பெரிய வரலாற்று சாதனை. மத்திய பிரதேச மக்களை பொறுத்தவரை அவர்கள் வளர்ச்சியை விரும்புவர்கள். அங்கு இருக்க கூடிய முதலமைச்சர் மேல மாமா மாமா என்று அனைவரும் பாசத்தோடு… குடும்ப உறவோடு… பாசத்தோடு….  இருக்கிறார்கள்.

நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் எந்த அளவுக்கு மக்கள் போற்றுகின்ற தலைவராக இருக்கிறார் என்பதை மத்திய பிரதேச தேர்தல் காட்டி கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான்ல ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்று இருக்கின்றோம்.  மத்திய பிரதேசத்தில் மலை வாழ் மக்களும் சரி, பட்டியலின மக்களும் சரி,  சத்தீஸ்கரில் இருக்கிற மலைவாழ் மக்கள் முழுமையாக பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுள்ளார். நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடிஜி அவர்கள் தொடர்ந்து மலை வாழ் மக்களுடைய நலனுக்காக பாடுபட்டார்கள் என தெரிவித்தார்.