மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஒரு பெண் மற்றும் ஒரு நபர் பொதுவெளியில் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் முதலமைச்சரின் ஆட்சியில், அதே மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இதுபோன்ற ஜலீல், முன்னா மற்றும் ஆரிப் போன்ற நபர்கள் ஒரு பெண்ணை ஈவுஇரக்கமின்றி தாக்கும் இந்தத் தாலிபான் பாணியிலான செயல், அம்மாநிலத்தில் நிலவும் சட்டமற்ற நிலையை உலகிற்குப் பறைசாற்றுகிறது. அரசியல் செல்வாக்கு மிக்க நபர்களால் நடத்தப்படும் இத்தகைய அராஜகங்கள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“>

சமூக நீதி மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசும் மாநில அரசு, இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குற்றவாளிகள் சட்டத்திற்குப் பயப்படாமல் நடுரோட்டில் ஒரு பெண்ணை வதைப்பது, அங்குள்ள நீதித்துறை மற்றும் காவல்துறையின் செயல்பாட்டின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

மேலும் நாகரீகமான ஒரு சமூகத்தில், மதத்தின் பெயராலோ அல்லது தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்காகவோ ஒரு பெண்ணைத் தண்டிக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற “ஜல்லாத்” (கொலைகாரர்கள்) மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.