வட இந்தியாவில் நிலவும் கடும் பனிமூட்டத்திற்கு மத்தியில், கார் ஒன்றின் முன்பக்கத்தில் அமர்ந்து கொண்டு ஓட்டுநருக்கு வழி காட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடர் பனி காரணமாகச் சாலைகள் சரியாகத் தெரியாத நிலையில், அந்த நபர் காரின் முன்புறம் அமர்ந்து கொண்டு கைகளால் சைகை காட்டி வாகனத்தை வழிநடத்துகிறார்.
மேலும் நவீன தொழில்நுட்பமான வசதியைக் கிண்டல் செய்யும் விதமாக, இதை “மனித இண்டிகேட்டர்” என்று அவர்கள் குறிப்பிட்டாலும், இந்தச் செயல் மிகவும் ஆபத்தானது என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இது சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, வேடிக்கையாகத் தொடங்கினாலும் அதன் பின்னால் இருக்கும் விபரீதத்தை இணையவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வாகனத்தின் முன்புறம் இப்படி அமர்ந்து செல்வது இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சட்டவிரோதமானது என்பதோடு, கடும் அபராதத்திற்கும் கைது நடவடிக்கைக்கும் வழிவகுக்கும்.
இந்நிலையில் கடும் குளிரில் இத்தகைய சாகசங்களில் ஈடுபடுவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களைத் தவிர்த்து சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
