நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர் மற்றும் எம்பி ஆகிய பதவிகளில் இருந்த கண்ணன் நவம்பர் 5ஆம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் பாஜகவில் இருந்து கண்ணன் வெளியேறினார்.