த்ரெட்ஸ்  என்ற செயலியை பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியது. இத செயலி இன்று முதல் கிடைக்கும். இதில் நீங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக உள் நுழையலாம். இன்ஸ்டாகிராம் ஐ போலவே இது உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களை இணைப்பதாகவும், இன்ஸ்டால் கணக்கில் பின் தொடர்பவர்களை பின் தொடர்வதாகவும் கூறுகின்றது.

இதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரலாம். ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. மார்க் ஜுக்கர்பெர்க், எலான் மஸ்க் இடையே போட்டி நிலவும் சூழலில் மெட்டா அதிரடி காட்டி வருகிறது.