எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதனால் ட்விட்டரில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்டா நிறுவனம் Threads என்ற புதிய செயலியை இன்று  அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் ‘Threads’ பயன்பாட்டை கொண்டு வர மெட்டா விசைப்பலகையில் உள்ள Ctrl+C+V விசைகளை மட்டுமே பயன்படுத்தியதாக நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கு ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதாவது நெட்டிசனின் கருத்திற்கு எலான் மஸ்க் ஒரு சிரிக்கும் ஈமோஜியை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.