உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சிறந்த அப்டேட்டை வெளியிட உள்ளது. அதாவது உயர்தர வீடியோக்களை அனுப்பும் திறனை வழங்கும் அம்சம் தான் அது. வீடியோ எந்த தரத்தில் இருக்கிறதோ அதே தரத்தில் வீடியோக்களை இனி பகிரலாம். இந்த புது அப்டேட் மூலம் பயனர்கள் சிறந்த தளத்தில் வீடியோக்களை பகிர அனுமதிக்கும் டிராயிங் எடிட்டருக்குள் ஒரு பொத்தானை பெறுவார்கள்.

வீடியோவின் பரிமாணங்கள் ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும்போது லேசான கம்ப்ரஷன் பயன்படுத்தப்படும். இதன் மூலமாக ஒட்டுமொத்த தரம் கிடைக்கும். வீடியோவிற்கு ஹை குவாலிட்டி ஆப்ஷன் இயல்பு நிலை அமைப்பாக அதாவது டீஃபால்ட் செட்டிங்காக இருக்காது. ஒவ்வொரு முறையும் சிறந்த தரத்தில் வீடியோக்களை பகிர விரும்பும் பயனர்கள் அதனை கைமுறையாக தேர்ந்தெடுக்க வேண்டும். பயனர்கள் தங்களின் வீடியோ பகிர்வே விருப்ப தேர்வுகளில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதை இது உறுதி செய்கின்றது. உயர்தர வீடியோ பகிர்வு அம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் இந்த அம்சம் படிப்படியாக மற்ற பயனர்களுக்கும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.