பொதுவாகவே ஸ்மார்ட் போன்கள் சில சமயங்களில் கைத்தறி தண்ணீரில் விழுந்து விடும். அப்படி தண்ணீரில் போன் தவறி விழுந்தால் அதனை என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் தண்ணீரில் தவறி விழுந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து உலர்ந்த துணி கொண்டு நன்றாக துடைக்க வேண்டும். பின்னர் போனை டிஸ்யூ பேப்பரில் அல்லது காட்டன் துணி கொண்டு நன்கு சுற்றி வைக்க வேண்டும்.

சிம்கார்டு மற்றும் மெமரி கார்டு ஃபோனில் இருந்து கழற்றிவிட வேண்டும். முடிந்தால் பேட்டரியும் அகற்றி விடலாம். குறிப்பிட்ட நேரம் வரை போனை ஆன் செய்ய கூடாது. தண்ணீரில் விழுந்த போனை முடிந்த வரை காற்று புகாத இடத்தில் அடைத்து வைக்க வேண்டும். அதாவது அரிசி இருக்கும் பையில் காட்டன் துணியால் சுற்றப்பட்ட ஃபோனை அடைத்து வைப்பது நல்லது. தண்ணீரில் விழுந்த போனை 48 மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும். போன் உப்புநீரை விட தூய நீரில் விழுந்தால் அதனை சரி செய்வது மிகவும் எளிது. அதற்காக உப்பு நீரில் விழுந்த போனை தூய நீர் கொண்டு கழுவ கூடாது.

அதே சமயம் தண்ணீரில் விழுந்த போல் ஒருவேளை ஆனில் இருந்தால் உடனே கூகுளுக்கு சென்று fix my speaker என்று டைப் செய்து உள்ளே நுழைந்து அதில் உள்ள ஆக்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்ததும் ஒரு சத்தம் வரும். அதாவது அந்த சத்தம் மூலமாக ஸ்பீக்கரில் உள்ள அனைத்து தண்ணீரும் நொடி பொழுதில் வெளியேற்றப்படும். தண்ணீரில் போன் விழுந்ததும் அதனை உதறினால் தண்ணீர் உள்ளே செல்லும் அபாயம் உள்ளது. எனவே தண்ணீரில் போன் விழுந்ததும் அவ்வாறு செய்யாமல் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஸ்பீக்கரில் உள்ள தண்ணீரை எளிதில் வெளியேற்றலாம்