இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தினந்தோறும் பலரும் அடிமையாகி வருகிறார்கள். இது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால் நியூசிலாந்து நாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு பார்டர் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை வலுப்படுத்தி தலை முறை புகைபிடித்தல் தடை என்ற சட்டம் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் நியூசிலாந்தில் புதிதாக வரவுள்ள அரசாங்கம் புகைபிடிப்பதை தடுப்பதற்கான சட்டத்தை தடை செய்யும் என்று பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஷன் அறிவித்துள்ளார். இதனால் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் சுற்றுச்சூழலுக்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் என்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.