காங்கிரஸ் கட்சி தலைவராக 5 ஆண்டுகளை கே எஸ் அழகிரி நிறைவு செய்ய உள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் எந்த காங்கிரஸ் தலைவரும் செய்யாத இந்த சாதனையை சத்தமே இல்லாத வகையில் இவர் நிகழ்த்தியுள்ளார். காங்கிரஸ் தலைவராக இருப்பதற்கு அழகிரிக்கு தகுதி இல்லை என்று இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் போர் கொடி தூக்கியுள்ள நிலையில் அழகிரி தொடர்ந்த இந்த பதவியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.