இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே புகையிலை மற்றும் சிகரெட் பலகத்திற்கு அடிமையாகி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக அரசு சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் சில மாற்றத்தை செய்துள்ளது. அதாவது புகையிலை பயன்படுத்துவதற்கான சட்டபூர்வ வயது 18 ஆக இருந்த நிலையில் தற்போது 21 வயதாக உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே 12 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் அதிக அளவில் ஹூக்கா வார்களுக்கு வருவதால் இதற்கு தடை விதிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுவயதிலேயே ஹுக்கா சாப்பிடுவதால் ஒரு மனிதனை தவறான பாதைக்கு இழுத்துச் செல்வதாக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் சட்டத்தின்படி பொது இடங்களில் புகை பிடிப்பதை தவிர்க்கும் வகையில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 100 மீட்டர் பகுதிகளுக்கு உள்ளே புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.