
இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுகளிலும், புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை பொறிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 2023-ம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் கர்ப்பிணிகள் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் பட்சத்தில் அவர்களுக்கு ஆறு தவணைகளில் 116,000 பவுண்டுகள்(அதாவது இந்திய ரூபாயில் 1,22,66,269) வழங்க உள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.