தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளிக்க தமிழக அரசு அதிரடியாக 2 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.

இதன் ஒரு முக்கிய அங்கமாக, உடற்கல்வி ஆசிரியர்களுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘ஆசிரியர் வளநூல்கள்’  முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 2.68 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், இவை அனைத்தும் வரும் வாரத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு, பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.