நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை,சோகம்,கோவம், துரோகம், அழுகை, நட்பு, காதல், கலாட்டா என பிரபலங்களின் நாம் பார்த்திராத உண்மை முகத்தை ஒரே வீட்டிற்குள் அடைத்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும். இதற்கு பெரிய ரசிகர் பட்டாலும் உள்ளனர்.

இந்த சீசனில் பெரும் சர்ச்சைகளுக்கிடையே, மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் அர்ச்சனா. எனினும் இவர் பி.ஆர் வைத்து, 1 கோடி செலவு செய்து ஜெயித்தார் என இவருடைய எதிர் போட்டியாளர்களின் ரசிகர்கள் கூறி வந்தனர். இதில் உண்மை இல்லை என தர்க்கங்களுடன் விளக்கியுள்ளார் அர்ச்சனா.