பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம்  விநாயகர் சிலைகளை தயாரிக்க விதித்த தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. பாளையங்கோட்டையில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலப்பொருளுடன் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்க தடை விதித்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க கோரி ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் எந்த வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தாலும் அந்த விநாயகர் சிலை அனுமதிக்கப்படாது. வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு இத்தகைய சிலைகளை தயாரிப்பதற்கான அனுமதி கூட கிடையாது என தெரிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விநாயகர் சிலைகள் தொடர்பான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்