ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம்களிடையே தேவையற்ற பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து சிறந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

​சகோதர நாடுகளான ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதியையும் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். இஸ்லாமிய ஒற்றுமையை வலியுறுத்தி மொஜ்தபா காமேனி விடுத்துள்ள இந்த அமைதி அழைப்பு, தற்போது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு நாடுகளும் ஈரானின் இந்த ஆலோசனையை ஏற்றுப் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.